Saturday, March 23, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசன் ரைசர்ஸ் அறிவிச்சிட்டாங்க.. ஆனா தில்லி அணி?

    சன் ரைசர்ஸ் அறிவிச்சிட்டாங்க.. ஆனா தில்லி அணி?

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம்  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தில்லி அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. 

    இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.

    இந்நிலையில், ஐபிஎல் குறித்த பேச்சுகள் சமூகவலைதளம் முழுக்க நீண்டுள்ளது. பல வீரர்களும் ஐபிஎல் குறித்து தங்களது கருத்துகளை, எதிர்பார்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அணிகளும் தங்கள் அணி சார்ந்த அப்டேட்டுகளை வழங்கி வருகின்றன. 

    அந்தவகையில், தற்போது சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் மார்க்ரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் தில்லி அணியின் கேப்டன் யாரென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. தில்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்திற்கு விபத்து ஏற்பட்ட காரணமாக அவர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதனால் தில்லி அணி புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

    தற்போதைய கணிப்புகளின்படி, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், துணை கேப்டனாக அக்ஷர் படேலும் தேர்வாகவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக, 2016-ல் ஐபிஎல் போட்டியை சன்ரைசர்ஸ் வென்றபோது அந்த அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ‘காதலை தேடிட்டு நம்ம போக கூடாது..அதுவா நடக்கனும்’ – கௌதம் மேனன் ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....