Monday, March 18, 2024
மேலும்
  Homeசெய்திகள்அரசியல்கார்த்திக் கோபிநாத் கைது; வலுக்கும் விமர்சனங்கள்....என்ன நடக்கிறது?

  கார்த்திக் கோபிநாத் கைது; வலுக்கும் விமர்சனங்கள்….என்ன நடக்கிறது?

  பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

  தொடர்ந்து விசாரணைக்குப் பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கார்த்திக் கோபிநாத் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420, 409 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரை வரும் ஜூன் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

  கைதுக்கான காரணம் :

  பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான உபகோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்வதாக கூறி, கார்த்திக் கோபிநாத் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.

  இந்த கோயில் படத்தை காண்பித்து, இணையதளம் மூலம் 34 லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்டது மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் கோயில் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்ததாக,  ஏற்கனவே கார்த்திக் கோபிநாத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்த்குமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கார்த்திக் கைது குறித்து எழும் விமர்சனங்கள்:

  சமூக ஆர்வலர்கள் கருத்து: ‛‛அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் பற்றி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்த யடியூப்பர்களை கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் நுாற்றுக்கணக்கில் கூடி போராடினர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆளுங்கட்சியை நாகரீகமாக விமர்சனம் செய்த கார்த்திக்கோபிநாத்தை அவசர கதியிலும், அதிவேகத்திலும் கைது செய்துள்ளனர். இவரை கைது செய்த வேகத்தை, தொடர்ந்து ஹிந்து மதம் மீது அவதுாறுகளை பரப்பும் மற்ற விமர்சகர்களிடம் ஏன் போலீஸ் காட்டுவதில்லை. இது கடும் கண்டனத்திற்கு உரியது” என்றனர்.

  பிரபல விளையாட்டு மற்றும் அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் கருத்து:

  கோபிநாத் வழக்கு தொடர்பாக பத்மஸ்ரீ விருது பெற்ற சிற்பி கேவி முனுசாமி என்னிடம் கூறும்போது, இந்து சமய அறநிலையத்துறை, கொள்முதல் செய்வதற்கு நேரடியாக பணம் செலுத்துவது கிடையாது. தங்கள் சார்பில், நன்கொடையாளர்களை பணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளும். சிறுவாச்சூர் கோவில் சிலைகளுக்கும் பக்தர்கள், முன்பணம் செலுத்தியுள்ளனர். பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்த தனியார் கோவிலுக்கும் பக்தர்கள் பணம் செலுத்தியுள்ளதாக முனுசாமி கூறியுள்ளார்.

  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிறுவாச்சூரில் உள்ள கோவிலுக்கான சிலைகள் செதுக்கும் பணி, புதுச்சேரியின் வில்லியனூர் அருகே நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். தன்னை அணுகிய கார்த்திக் கோபிநாத், மக்களிடம் பணம் வசூலித்து நிதி வழங்கப்படும் எனவும், 33 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியதாக முனுசாமி தெரிவித்தார். பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறியுள்ள முனுசாமி, சிலைகள் விரைவில் தயாராகிவிடும் என்றார். இதற்கான பணத்தை இந்து சமய அறநிலையத்துறை செலுத்தவில்லை எனவும் முனுசாமி என்னிடம் கூறினார். வசூலிக்கப்பட்ட பணம் சில பக்தர்களுக்கு பயன்படுத்தப்படும் எனக்கூறிய கார்த்திக்கோபிநாத் முனுசாமியிடம் கூறினார்.

  அதேநேரத்தில், பணிகளை விரைவாக துவக்குவதற்கு முன்பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் கார்த்திக் கோபிநாத் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது புரியவில்லை. விரைவில் உண்மைகள் வெளியே வரும் என்று அவர் கூறினார்.

  இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களுக்கு எதிரான குரல்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

  இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகி வருவதால், ‘ இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது’ என அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியிருந்தார். மேலும், ‘ சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்’ எனவும் அதனை சமர்ப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

  சென்னையில் இடம்பெறுமா அப்துல்கலாம் சிலை? சென்னை மாநகராட்சியின் பதில் என்ன?

  இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
  - Advertisment -

  Must Read

  காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

  சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....