Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்புனித் ராஜ்குமாருக்கு "கர்நாடக ரத்னா" விருது: உற்சாக நடைபோட்டு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி..

    புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா” விருது: உற்சாக நடைபோட்டு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி..

    மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை கவுரவிக்கும் விதமாக கர்நாடக அரசு சார்பில் இன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனி விமானம் மூலம் கர்நாடகாவுக்கு சென்றார். அவரை அம்மாநில அமைச்சர் ஓடோடி வந்து வரவேற்ற வீடியோ காட்சி அனைவராலும் பகிரப்பட்டு லைக்ஸை குவித்து வருகிறது.

    கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் ,பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு கொண்டாடப்பட்டவருமான புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி அதிகாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    46 வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்த புனித் தனது சிறப்பான பணிகளால் பலரின் இதயங்களை வென்று, ஒரு வலிமைவாய்ந்த நடிகராக வளம் வந்தவர். புனித் ராஜ்குமார் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அவரது குடும்பத்தினராலும்,கன்னட மக்களாலும் அண்மையில் அனுசரிக்கப்பட்டது .

    இந்நிலையில் புனித்ராஜ்குமார் அவர்கள் கலைத்துறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய சமூக சேவைகளை செய்து ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி ,மருத்துவம் போன்ற எண்ணற்ற உதவிகளையும் செய்து வந்துள்ளார் .

    இதனால் இவரது மறைவிற்கு பிறகு புனித் அவர்களின் ரசிகர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் கர்நாடக அரசின் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களும், அம்மாநிலத்தின் உயரிய விருதான ‘கர்நாடகா ரத்னா’ விருதை நவம்பர் 1- ஆம் தேதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக சட்டசபையான விதான சவுதாவில் செய்திருந்தார் .

    இதையொட்டி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கர்நாடகம் சென்றார்.அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் ரஜினி அவர்களை கண்டதும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. சுதாகர் ஓடோடி வந்து வரவேற்ற வீடியோ காட்சி தற்போது அனைவராலும் பகிரப்பட்டு லைக்ஸை குவித்து வருகிறது.மேலும் ‘என்ன நடை.. என்ன ஸ்டைல்’ என்று ரஜினியின் வேகத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    அதேபோல் தெலுங்கு திரையுலகில் இருந்து ஜூனியர் என்டிஆருக்கும் கர்நாடக அரசு சார்பில் அழைப்பு விடுத்து ,அதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார்.

    அதன்படி ரஜினியை தொடர்ந்து தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆரும் கர்நாடக சட்டசபையான விதான சவுதாவிற்கு வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இன்று நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

    அரசு சார்பில் கொடுக்கப்படும் இந்த விருது புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவுக்குப் பிறகு வழங்கப்படும் முதல் விருதாகும். ஏற்கனவே கர்நாடகத்தில் இதுவரை 9 பேருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் 10-வதாக புனித்ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதேபோல் கன்னடத் திரையுலகில் சிறந்த சேவைக்காக ஒரே குடும்பத்தில் ‘கர்நாடகா ரத்னா’ விருது பெற்ற தந்தை – மகன் இவர்கள் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: “கொலைக்கு எத்தனை வருடம் தண்டனை”: கூகுளில் தேடிய பிறகே காதலனை கொலை செய்ய திட்டமிட்டரா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....