Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரி: பாலியல் பலாத்காரம் செய்த பட்டதாரி; உயிரிழந்த பெண்

    கன்னியாகுமரி: பாலியல் பலாத்காரம் செய்த பட்டதாரி; உயிரிழந்த பெண்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்கத்துவீட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பொறியியல் பட்டதாரி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணுக்கு பக்கத்துவீட்டில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரி எட்வின் என்பவர் பலமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்க முயன்றார். 

    இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் எட்வினின் தாயிடமும் உள்ளூர் ஆட்களிடமும் புகார் கூறியுள்ளார். இவர்களும் எட்வினை கண்டித்து அனுப்பி உள்ளனர். இதனால் கோபமடைந்த எட்வின் அந்தப்பெண்ணின் மீது அதீத கோபத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 

    இதனிடையே அந்தப் பெண் கடந்த 13 ஆம் தேதி உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்து தனிமையில் இருந்தார். அப்போது எட்வின் வீட்டில் நுழைந்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போது அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே எட்வின் அவரை கடுமையாக தாக்கி காலால் மிதித்து பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி சென்றார். 

    பிறகு, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கையிலும் எட்வின் ஒன்றும் தெரியாதது போல உடன் சென்றுள்ளார். 

    இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் எட்வின் தான் இதற்கு காரணம் என தெரியவந்தது. மேலும் எட்வின் கைது செய்யப்பட்டார். 

    இந்நிலையில், இறுதியாக நாகர்கோயில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. 

    கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு; தமிழர் ஒருவர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....