Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மாணவர்களுக்கு வந்த புது அப்டேட்!

    கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு மாணவர்களுக்கு வந்த புது அப்டேட்!

    மத்திய பல்கலைக் கழகங்களுக்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாட்டு மாணவர்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்காக கியூட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 

    இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    அதே சமயம், கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக, தமிழக மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்ற விதியை தளர்த்த மாணவர்கள் மத்தியில் இருந்தும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. 

    இந்த நிலையில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்களைக் குறிப்பிடத் தேவையில்லை என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    கன்னியாகுமரி: பாலியல் பலாத்காரம் செய்த பட்டதாரி; உயிரிழந்த பெண்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....