Saturday, May 4, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைசுற்றுலாத் தளங்களுக்கு செல்வதுதான் காணும் பொங்கலா?

    சுற்றுலாத் தளங்களுக்கு செல்வதுதான் காணும் பொங்கலா?

    தை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல், நான்கு திருநாள்களை கொண்டது. முதல்நாள் – போகி, இரண்டாம் நாள் – தைப்பொங்ல், மூன்றாம் நாள் – மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் – காணும் பொங்கல்.

    மூன்று பொங்கல் திருநாள்களையும் முடித்து விட்டு நான்காவது நாளாக கொண்டாடப்படும், பொங்கலான காணும் பொங்கல் தன் பெயரிலேயே தனக்கான அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது. காணும் பொங்கல் அன்று காண்பதுதானே அழகு.

    காண்பது என்றவுடன் அனைவரும் ஏதோ ஒரு சுற்றுலா தளத்தை காண புறப்பட்டு விடுகின்றனர். ஆனால், காணும் பொங்கல் என்பது சுற்றுலா தளத்தை காணுதல் அல்ல என்பதை நாம் நம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். காணும் பொங்கல் அன்று நமது உற்றார், உறவினர்கள், நண்பர்களை காணுதல் என்பது நடைபெற வேண்டிய இயல்பான ஒன்றாகும்.

    முக்கியமாக, காணும் பொங்கல் அன்று வீட்டில் உள்ள பெரியவர்களை, குடும்பத்தில் உள்ள பெரியவர்களை கண்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும். ஆசி பெறுதல் என்பது எக்காலத்துக்குமான முக்கிய நிகழ்வாகும். மேலும், திருமணமான பெண்கள் காணும் பொங்கலின்போது, பொங்கல் பானையில் கட்டிய புது மஞ்சள் கொத்தினை எடுத்து குடும்பத்தில் அல்லது அக்கம் பக்கத்தில் உள்ள ஐந்து சுமங்கலி பெரியோர்களிடம் ஆசி பெறுவர்.

    ஆசி பெற்றப்பின், அந்த மஞ்சள் கொத்தில் உள்ள மஞ்சளை தினந்தோறும் கல்லில் இழைத்து முகத்திலும், பாதத்திலும் பூசி குளிப்பர். இது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வந்த ஒரு வழக்கமாகும்.

    நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால், காணும் பொங்கலன்று நிறைய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை காணலாம். சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளோடு, இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறுதல், கபாடி, கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் நடைபெறும். பெரியவர்களுக்கான போட்டிகளும் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்கு பின்னும் காணும் பொங்கலின் காரணம் உள்ளது.

    அதாவது, காணும் பொங்கலன்று முன்னவே கூறியதுபோல உற்றார், உறவினர்களை சந்தித்தல் என்பது நேரும். அந்த சந்தித்தலின் சுவையை கூட்டவும், மகிழ்ச்சியை மழலையாக பொழியவைக்கவும் இந்தப் போட்டிகள் காணும் பொங்கலன்று நடைபெறுவதாக ஒரு கூற்று உண்டு.

    காணும் பொங்கலின் அடிநாதமே அன்பு, ஒற்றுமை, மரியாதை போன்ற சமூக உணர்வுகளை வெளிப்படுத்த வைப்பதுதான். நமக்கென்று பிறரும், பிறருக்கென்று நாமும் இருப்பதை உணர்த்ததான் என்பதை மறக்க வேண்டாம்.

    விண்ணில் தெரியப் போகும் வால் நட்சத்திரம்; 50,000 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அற்புதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....