Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹாங் காங்கின் புகழ்பெற்ற மிதக்கும் உணவகம் கடலுக்குள் மூழ்கியது...

    ஹாங் காங்கின் புகழ்பெற்ற மிதக்கும் உணவகம் கடலுக்குள் மூழ்கியது…

    ஹாங் காங் நகரில் இருந்த புகழ்பெற்ற மிதக்கும் உணவகமான ‘ஜம்போ உணவகம்’ 1000 மீட்டர் ஆழமுள்ள தென் சீனக்கடல் பகுதியில் மூழ்கிய நிகழ்வு அந்த நாட்டினரிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஜம்போ மிதக்கும் உணவகமானது 80 மீட்டர் நீளம் கொண்டது. மூன்று அடுக்குகளைக் கொண்ட 2000 பேர் வரை அமர்ந்து உண்ணும் அளவிற்கு பெரிய உணவகமாகும். ஹாங் காங் நாட்டின் பல திரைப்படங்களில் இடம் பெற்ற இந்த உணவகத்திற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஜிம்மி கார்ட்டர் மற்றும் டாம் க்ரூஸ் போன்ற புகழ்பெற்ற நபர்கள் வந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 46 ஆண்டுகளாக ஹாங் காங்கில் இருந்த இந்த உணவகமானது பெயர் குறிப்பிடப்படாத இடத்திற்கு படகுகளால் இழுத்துச்செல்லப்பட்டது. சனிக்கிழமை தென் சீனக்கடலில் இருக்கும் பாராசெல் தீவுகளுக்கு அருகில் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடலுக்குள் மூழ்கியது.

    1000 மீட்டருக்கு அடியில் மூழ்கியதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்ச்சியினைப் பற்றி, ‘இந்த விபத்தானது மிகவும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.’ என அபெர்தீன் உணவக நிறுவனமானது தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான தகவல்களைத் திரட்டி வருவதாகவும் அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது.

    பழங்கால சீன அரண்மனைகளைப் போல வடிவமைக்கப்பட்ட இந்த மிதக்கும் உணவகமானது, அதன் வடிவமைப்பிற்காகவும், வண்ண விளக்குகள் அலங்கரிப்பிற்காகவும் புகழ் பெற்றது. ஒரு காலத்தில் உலகின் மிகப் பெரிய உணவகம் என்கிற புகழினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா காலத்தில் இந்த உணவகமானது பெரும் நட்டத்தினைச் சந்தித்தது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஜம்போ உணவகமானது 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நட்டத்தினை சந்தித்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும், மறு அறிவிப்பு வரும்வரை உணவகமானது மூடப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    புகழ்பெற்ற இந்த உணவகத்தினை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் உணவகத்தினைப் பராமரிக்க அதிக அளவு பணமானது தேவைப்பட்டதால் அனைத்து முயற்சிகளும் வீணாயின.

    கடலில் மூழ்கிய ஜம்போ உணவகத்தினை நினைவுகூரும் விதமாக ஹாங் காங் நாட்டினரும், அங்கு சென்றவர்களும் தங்களது நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....