Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாதலனை கொன்ற விவகாரம்; குளிர்பானத்தில் விஷம் கலந்தது எப்படி? நடித்து காட்டிய காதலி..!

    காதலனை கொன்ற விவகாரம்; குளிர்பானத்தில் விஷம் கலந்தது எப்படி? நடித்து காட்டிய காதலி..!

    காதலனை கொலை செய்த கிரீஷ்மா, காதலனுக்கு எப்படி விஷம் கலந்து கொடுத்தார் என்பதை நடித்துக்காட்டியுள்ளார்.

    கேரள மாநிலம் பாறசாலைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஷரோன் கடந்த அக்டோபார் மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி ஷரோனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். 

    இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஷரோனிடமிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அவரது காதலி  கிரீஷ்மா ஆயுர்வேத மருந்து என்று சொல்லி பூச்சி மருந்தைக் கலந்து குடிக்கக் கொடுத்ததை ஒப்புக்கொள்ளவே, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட பின் கிரீஷ்மாவை, கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல காவல்துறை திட்டமிட்டது. இந்நிலையில், அவர் தற்கொலைக்கு முயலவே விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இதன் பின்பு, கிரீஷ்மாவை கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கிரீஷ்மாவின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிரீஷ்மாவை, கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது வீட்டின் சீல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும், கிரீஷ்மாவை அவரது வீட்டில் வைத்து  காவல்துறை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஷரோனிற்கு எப்படி விஷம் கலந்து கொடுத்தார் என்பதை இவர் நடித்துக்காட்டியுள்ளார். இதை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்துக்கொண்டனர். மேலும், நடைபெற்ற விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன்படி, கிரீஷ்மா கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டதாகவும், இதற்காக பல இடங்களுக்கு அவரை சுற்றுலா அழைத்துச் சென்று ‘ஜூஸ் சேலஞ்ச்’ என்ற பெயரில் குளிர்பானத்தில் அவ்வப்போது விஷத்தை கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. 

    அதாவது, இரண்டு ஜூஸ் பாட்டில்களை வாங்கிக்கொண்டு, ஒன்றை கிரீஷ்மாவும், மற்றொன்றை ஷரோனும் குடித்துள்ளனர். முதலில் யார் குடிப்பது என்ற போட்டியில் இருவரும் ஜூஸ் குடிப்பர். இதில் ஷரோன் குடிக்கும் ஜூஸ் பாட்டில்களில் விஷம் கலந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷரோன் கொலை சார்ந்த விசாரணைகள் நடக்கவுள்ளது. 

    முன்னதாக, கேரள காவல்துறை கிரீஷ்மா வீட்டின் சீல் உடைப்பு காரணமாக விசாரணை நடத்த தமிழக காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க10% இட ஒதுக்கீடு தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்களின் கண்டனங்களும்…வரவேற்பும்..!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....