Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல நாவலை திரைப்படமாக எடுக்கவுள்ளாரா இயக்குநர் சங்கர்? - அசரவைத்த தகவல்!

    பிரபல நாவலை திரைப்படமாக எடுக்கவுள்ளாரா இயக்குநர் சங்கர்? – அசரவைத்த தகவல்!

    இயக்குநர் சங்கர் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து பிரபல நாவலான வேள்பாரியை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இயக்குநர் சங்கர் இயக்கத்தில் தற்போது ராம்சரண் நடித்து வருகிறார். ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. அதேசமயம், இயக்குநர் சங்கர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். 

    இரு திரைப்படங்களையும் ஒரே சமயத்தில் இயக்கி வருவதால் சங்கர் மிகவும் பிஸியாக இயங்கி வருகிறார். மேலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருந்த ‘அந்நியன்’ திரைப்பட ரீ-மேக் காப்புரிமை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

    விரைவில், ராம்சரண் திரைப்படமும், இந்தியன்-2 திரைப்படமும் முடிவுபெறவுள்ள நிலையில் ஷங்கர் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், அந்நியன் திரைப்படத்திலேயே மீண்டும் நடிப்பார்களா? போன்ற கேள்விகளும் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில், இயக்குநர் சங்கர் பிரபல நாவலான ‘வேள்பாரி’-யை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்திலேயே ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 3 பாகங்களாக இப்படம் உருவாகலாம் எனவும் எதிர்பாரக்கப்படுகிறது. மிக முக்கிய பிரபல நாவலாக கருதப்படும் வேள்பாரியை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: உலக நாயகன் கமல்ஹாசனின் அரிய புகைப்பட தொகுப்பு ..! பர்த்டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....