Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை இனி வாங்க முடியாதா?

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரை இனி வாங்க முடியாதா?

    அடுத்த ஆண்டு முதல் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக  ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் மக்களிடையே புகழ்பெற்றவை. குறிப்பாக, சொல்ல வேண்டுமானால் தயாரிப்பான பேபி பவுடர் உலகளவில் மிகவும் புகழ்பெற்றது.

    இந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 100 ஆண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டது. மேலும், இந்நிறுவனம் பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருள்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. 

    இந்நிலையில், வருகிற 2023-ம் ஆண்டு முதல் பேபி பவுடர் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக  ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆம், சமீப காலமாகவே ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இது சார்ந்து, வட அமெரிக்காவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மீது தொடரப்பட்டன.

    இந்த குற்றச்சாட்டுகளை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறவே மறுத்தது. மேலும், இந்த பவுடர் அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு பின்னரே விற்பனை செய்யப்படுவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், இந்த பேபி பவுடரின் விற்பனை சரிந்தது.

    இதையடுத்து, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை அடுத்தாண்டு முதல் நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளது. அதே சமயம், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எங்களது பவுடர் சுத்தமானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

    மெட்டா தளம் மனித உரிமை ரீதியாக எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....