Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ''கின்னஸ் சாதனை'' படைத்த ஜான் சீனா !

    650 குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி ”கின்னஸ் சாதனை” படைத்த ஜான் சீனா !

    650 சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் ,ஜான் சீனா. 

    ஜான் சீனா WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியின் மூலம் உலகிற்கு அறிமுகமானார். அந்தப் போட்டியில் அவரது செயல்பாடுகளும், திறமைகளும், ஆக்ரோஷங்களும் ஜான் சீனாவுக்கு பல ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. மேலும், மல்யுத்தப் போட்டியில்லாமல், ஜான் சீனா பலருக்கும் உதவி செய்து வருகிறார். குறிப்பாக, உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இவர் செய்யும் உதவி அளப்பறியது. 

    பின்னாளில், பெரும் நடிகராக உருவெடுத்தப் பின்பும் ஜான் சீனா தனது உதவிகளை செய்து கொண்டேதான் வந்தார். மேலும், ‘மேக் ஏ விஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்டோரின் ஆசைகளை இவர் நிறைவேற்றி வருகிறார். 

    இந்நிலையில், உதவி செய்வதில் ஜான் சீனா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆம், இதுவரை ‘மேக் ஏ விஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் தீவிர உடல்நலம் பாதிக்கப்பட்ட 650 சிறுவர்களின் ஆசையை இவர் நிறைவேற்றியுள்ளார். இன்னமும் நிறைவேற்றி வருகிறார்.

    இதுவரை ‘மேக் ஏ விஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் அதிகளவிலான சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றியதாக கின்னஸ் சாதனைப்பட்டியலில் ஜான் சீனாவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

    இதை ‘கின்னஸ் உலக சாதனை அமைப்பு’ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தற்போது, கின்னஸ் உலக சாதனை படைத்த ஜான் சீனாவுக்கு பல்வேறு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. 

    இதையும் படிங்க : ”பாகிஸ்தான் அணியின் ஜெர்சி தர்பூசணி பழம் மாதிரி இருக்கு” பாக். முன்னாள் வீரர் கனேரியா கிண்டல்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....