Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜான் சீனா..

    தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜான் சீனா..

    டபுள்யூடபுள்யூஈ (WWE) எனப்படும் உலக மல்யுத்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வீரர்களுக்கு உலகமெங்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல வீரர்களும் தங்களது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

    ஒரு மல்யுத்த நிகழ்ச்சியாக மட்டுமல்லாது, புற்றுநோய்யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் ஒரு அமைப்பாகவும் இந்த டபுள்யூடபுள்யூஈ (WWE) செயல்பட்டு வருகிறது.

    அமெரிக்காவினைத் தாயகமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி, அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும் தங்களது உதவிக்கரத்தினை நீட்டி வருகிறது.

    இந்த வகையில், உலகெங்கும் பிரபலமாக அறியப்பட்ட நபரான ஜான் சீனா, சமீபத்தில் செய்துள்ள நிகழ்ச்சி ஒன்று பலரையும் உணர்ச்சிவயப்பட்ட வைத்துள்ளது.

    உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரில் தங்களது வீட்டினை இழந்த மிஷா என்னும் இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆம்ஸ்டெர்டாம் நகருக்கு குடிபெயர்ந்துள்ளனர். 

    வளர்ச்சிதை மாற்றம் சம்பத்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மிஷாவிற்கு தெளிவாக பேச வராது. உக்ரைன் நாட்டினை விட்டு பிரிவதற்கு மனமில்லாமல் இருந்த மிஷாவிடம் அவரது அன்னை, மிஷாவின் நாயகனான ஜான் சீனாவினை நேரில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வதாய் உறுதியளித்துள்ளார்.

    இதனால் மனம் மாறிய மிஷாவும் உக்ரைன் நாட்டினை விட்டு ஆம்ஸ்டெர்டாம் நகருக்கு குடிபெயர சம்மதித்துள்ளார்.

    மிஷா மற்றும் அவரது அன்னையின் இந்த பயண அனுபவம் முழுவதும் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ எனப்படும் பத்திரிகையில் கட்டுரையாக வெளிவந்திருந்தது.

    திரைப்பட காட்சிகள் எடுப்பதற்காக லண்டன் சென்றிருந்த ஜான் சீனா, இந்த கட்டுரை முழுவதினையும் வாசித்து விட்டபின்பு மிஷாவினைச் சந்திப்பதற்கு ஆவண வேளைகளில் இறங்கியுள்ளார்.

    மிஷாவுக்காக திரைப்பட வேளைகளில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்ட ஜான் சீனா, லண்டன் மாநகரிலிருந்து ஒன்றரை மணிநேர விமானப் பயணத்தின் மூலம் ஆம்ஸ்டெர்டாம் சென்று, தனது ரசிகரான மிஷாவினைச் சந்தித்து அவருடன் தனது நேரத்தினைச் செலவழித்துள்ளார்.

    தனது நாயகன் தன்னைப் பார்க்க வருவதினை அறிந்த மிஷா, தனது அறை முழுவதினையும் அலங்கரித்து அவரை சந்திக்கும் தருணத்திற்காக தன்னை தயார்படுத்தியுள்ளார்.   

    ஜான் சீனா போன்று உடையினை உடுத்திக்கொண்டு அவருக்காக காத்திருந்த காணொளி தற்போது மிகவும் பிரபலமாக பகிரப்பட்டு வருகிறது.

    இது பற்றிக் கூறியிருந்த ஜான் சீனா, ‘மிஷாவின் கதை என்னை மிகவும் பாதித்துள்ளது என்பதினை அவரிடம் கூறினேன். அவரது கதை மட்டுமின்றி அவருக்கு துணையாய் இருக்கும் அவரது அன்னையின் கதையும் என்னை வெகுவாய் பாதித்துள்ளது. அந்த கட்டுரையினை படித்த உடனே மிஷாவினைப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் என்னுள் எழுந்தது.’ என்று கூறியுள்ளார்.

    மேலும், ‘பிரத்தியோகமாக மிஷாவினைச் சந்திப்பதற்காக ஆம்ஸ்டெர்டாம் வந்திருந்த எனக்கு இந்த மதியம் இனிமையாய்க் கழிந்துள்ளது. மிஷாவுடன் அமர்ந்து கேக் உண்டது அவருடன் சேர்ந்து விளையாடியது எனக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. எனது புது நண்பர்களை இன்று சந்தித்தது எனக்கு பெரும் நிறைவைக் கொடுத்துள்ளது.’ என்றும் ஜான் சீனா கூறியுள்ளார்.

    மிஷாவினைச் சந்தித்த ஜான் சீனா, அவருக்கு தனது மல்யுத்த உடையினையும், சாம்பியன் ஷிப் பெல்டினையும் பரிசாக அளித்துள்ளார்.

    ‘மேக் எ விஷ்’ (make a wish) எனப்படும் அமைப்பின் மூலம், பலருடைய கனவுகளை ஜான் சீனா நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுவரை 650 பேரின் ஆசைகளை நிறைவேற்றியுள்ள ஜான் சீனா, ஒரு தனி மனிதராக அதிக நபர்களின் ஆசைகளை நிறைவேற்றியவர் என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார்.

    சீனாவின் புகழ்பெற்ற வாக்கியமான ‘நெவெர் கிவ் அப்’ பலருடைய வாழ்க்கையினை மாற்றியுள்ளது. தனது கதாநாயகனின் கூற்றிற்கு ஏற்ப பலரும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை துணிவாக எதிர்கொண்டு சாதித்து வருகின்றனர்.

    ஜான் சீனாவின் இந்த பெருந்தன்மையான குணம் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    இந்தியா பொது மன்னிப்பு கேட்க தேவையில்லை – கேரள கவர்னர் பேச்சு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....