Monday, March 18, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரை400 நபர்கள் மட்டுமே உள்ள ஜாரவா இனம் - சிறப்பு பார்வை!

    400 நபர்கள் மட்டுமே உள்ள ஜாரவா இனம் – சிறப்பு பார்வை!

    அந்தமானில் வசித்துவரும் பழங்குடியின மக்களில் ஜாராவா இன மக்கள் மத்திய அந்தமான் மற்றும் தெற்கு அந்தமான் தீவுகளின் கடற்கரையில் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது இந்த இனத்தில் 400 நபர்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளியுலக தொடர்பு இன்றி ஒரு தன்னிறைவு சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்கள் உணவிற்காக பன்றி, ஆமை, மீன், நண்டு போன்றவைகளை அம்புகளால் வேட்டையாடுகின்றனர். மேலும் பழங்கள், வேர்கள், கிழங்குகள், மற்றும் தேன் போன்றவற்றை சேகரிக்கின்றனர். தேன் எடுக்க ஆண், பெண் என இருபாலரும் சேர்ந்தே சென்று வருகின்றனர். ஏனெனில் தேன் சேகரிக்க நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவையுள்ளது. தேன் சேகரிக்கும் பொழுது இவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பாடல்களைப் பாடுவதும் உண்டு.

    இவர்களிடையே ஊட்டச்சத்து சிறப்பாக உள்ளதாகவும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய விரிவான அறிவு அவர்களிடையே காணப்படுவதாகவும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

    மேலும், அவர்கள் வசிக்கும் காட்டுப்பகுதி அவர்களுக்கு தேவையானதை விட அதிகமாக வழங்கி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது. 2001-ஆம் ஆண்டு இவர்களை காட்டில் இருந்து அகற்றி 2 கிராமங்களில் குடியமர்த்த அதிகாரிகள் முயற்சித்தனர். இதனை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் குரல் எழுப்பியதன் விளைவாக 2004-ஆம் ஆண்டு இவர்களை வெளியுலகிற்கு கொண்டுவர எந்த ஒரு முயற்சியும் செய்யக் கூடாது என்ற கொள்கை வகுக்கப்பட்டது.

    சுற்றுலாப் பயணிகள் வேட்டையாடுவதிலும், அவர்களது வாழ்வாதாரத்தை திருடுவதிலும் ஈடுபடுவதால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. மேலும் இவர்களிடமிருந்து பரவும் நோய்த் தொற்றுகளாலும் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஜாராவா பெண்கள் வேட்டையாடுபவர்கள், குடியேறிகள், வாகன ஓட்டுனர்கள், மற்றும் பலரால் வன்புணர்வுக்கும் ஆளாகி உள்ளனர்.

    இவர்களை வெளியுலகிற்கு கொண்டு வரவும், அவர்களுடைய குழந்தைகளை உறைவிடப் பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்பிக்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் அவர்கள் காட்டில் வாழ்வதையே விரும்புகின்றனர்.

    ஏனெனில் பழங்குடியினரை வெளியுலக சமுதாயத்துடன் இணைப்பது என்பது அவர்களது தனிப்பட்ட அடையாளத்தையும், தன்னிறைவு வாழ்வினையும் அழித்து அவர்களை சமுதாயத்தின் விளிம்பு நிலையில் தினமும் வாழ்வதற்காக போராட வைக்கின்றது.

    நில ஆக்கிரமிப்பு மற்றும் வேட்டையாடுதல் ஜாராவா மக்களின் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, அதற்கு காரணமான அந்தமான் டிரங்க் சாலையை மூடுவதற்கான கோரிக்கையும் அவர்களிடையே வலுத்து வருகின்றது.

    பப்ஜி விளையாட விடவில்லை என்பதற்காக தாயின் உயிரை எடுத்த சிறுவன்; நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....