Saturday, May 4, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமாதம் ஒரு இலட்சம் ஊதியம்....இந்த வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

    மாதம் ஒரு இலட்சம் ஊதியம்….இந்த வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா?

    தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 4 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    மொத்தம் இரண்டு காலிப்பணியிடங்கள் உள்ளது. அவற்றுள் ஒரு பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.1,23,400 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வயதுவரம்பு 50 க்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பணியிடத்துக்கு மாத சம்பளமாக  ரூ.61,900 விதிக்கப்பட்டுள்ளது. வயதுவரம்பு 45- க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்பணியிடங்களுக்கான தகுதியாக பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    https://www.tancem.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: ” The Senior Manager (P&A) M/s. Tamil Nadu Cements Corporation Limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai -35″

    மேலும், இது குறித்து  விவரங்கள் அறிய https://www.tancem.in என்ற இணையதளப் பக்கத்தை அனுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இரண்டரை ஆண்டுகளில் அதானி தொட்ட உச்சம் – அதிர்ந்து போன உலக பணக்காரர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....