Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'கோப்ரா' படக்குழு எடுத்த திடீர் முடிவு பலனளிக்குமா?

    ‘கோப்ரா’ படக்குழு எடுத்த திடீர் முடிவு பலனளிக்குமா?

    டிமாண்டி காலணி மற்றும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம்தான், கோப்ரா. இந்தத் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 31) திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

    நேற்று திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடிகள்  கொண்டிருந்தது. இந்நிலையில், கோப்ரா திரைப்படம் மிக நீளமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.  இந்த விமர்சனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியிலும், திரைப்படத்தை மேலும் சுவாரசியப்படுத்தவும் 20 நிமிடங்கள்  குறைக்கப்பட்டுள்ளது.

    விக்ரம்

    இது குறித்து, கோப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து 20 நிமிடங்கள் குறைத்துள்ளதாகவும் இன்று(செப்டம்பர் 1) மாலையிலிருந்து 20 நிமிடங்கள் குறைக்கப்பட்ட கோப்ரா திரைப்படம் ஒளிபரப்பாகும் என்றும் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

    யுவனின் இசை மழையில் நனையத் தயாரா? – சென்னையில் இசைத் திருவிழா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....