Sunday, March 24, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புபாரத் டைனமிக்ஸில்1,40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு....

    பாரத் டைனமிக்ஸில்1,40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு….

    பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் 37 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. 

    பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு பிரிவுகளின் கீழ் காலியாகவுள்ள 37 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. 

    இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் பிஇ அல்லது பிடெக், எம.எஸ்.சி, சிஏ, எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் வயது 31-ற்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த 37 பணியிடங்களில் மாத ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பணியாளர்கள் தவிர மற்ற பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்துத் தேர்வின் மூலம், இப்பணிக்கு தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். https://bdl-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    இது குறித்து மேலும் விவரங்களை அறிய https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

    இளம் விவசாயிகளுக்கு ஏற்ற குறைந்த செலவில் அதிக மகசூல் ஈட்டும் சம்பங்கி சாகுபடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....