Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்5-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் ஆபரணத் தங்கத்தின் விலை...

    5-வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடரும் ஆபரணத் தங்கத்தின் விலை…

    சென்னை : நாட்டில் பணவீக்கம் ,பெண்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் ஆகியவற்றால் இந்திய மக்கள் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக மாற்ற சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும்ஆர்வம் வருகினறனர்.

    தங்கத்தின் விலை :

    தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த 22-ஆம் தேதியில் இருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் 5-வது நாளாக இன்றும் அதே விலை நீடிக்கிறது .

    சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 4,740 ரூபாய் ஆகவும், சவரனுக்கு , 37,920 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதால் கிராமுக்கு 5,172 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 41,376 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை:

    வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 64 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிலோவிற்க்கு 500 ரூபாய் அதிகரித்து 64,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நான் இன்னும் ஓய்வு பெறவில்லை.. செரீனா வில்லியம்ஸின் திடீர் அறிவிப்பால் குழம்பிய ரசிகர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....