Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி; சிக்கிய கடிதத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

    மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி; சிக்கிய கடிதத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

    என்னை அதிகமாக மிரட்டுகிறார்கள் என எழுதி வைத்துவிட்டு, கர்நாடகாவில் பிரபல மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடகாவில் ராம்நகர் மாவட்டம், மாகடி அருகே உள்ள கெம்பாபுரா கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான காஞ்சுகல் என்ற மடம் இருக்கிறது. இங்கு தலைமை மடாதிபதியாக பசவலிங்க சுவாமி கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார். 

    இந்நிலையில், இவர் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி இரவு மடத்தின் பணியாளர்களுடன் நிதி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவருடைய அறைக்கு உறங்க சென்றார். அவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.  இதன் காரணமாக, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, மடாதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். 

    பிறகு அங்கு இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் கூதூர் காவல்துறையினர் மடாதிபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    அங்கு நடத்தப்பட்ட சோதனையில், மடாதிபதி எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்தது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் “பஞ்சுகால் மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக, எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர். இந்த மிரட்டலால் தற்கொலை செய்து கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பல தகவல் அடங்கிய அந்த கடிதத்தை காவல்துறையினர் வெளியிட மறுத்துள்ளனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று மடத்தின் வளாகத்தில் மடாதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

    இதையும் படிங்க: “தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை”: வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....