Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅமர்நாத்தில் மேக வெடிப்பு; 15 பேர் பலி

    அமர்நாத்தில் மேக வெடிப்பு; 15 பேர் பலி

    அமர்நாத் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களின் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் நேற்று மேக வெடிப்பு ஏற்பட்டதால், பெருவெள்ளம் உருவானது. இதற்கடுத்து, அங்கு யாத்திரையில் ஈடுபட்டிருந்த பல பேர் வெள்ளத்தில் சிக்கினர். இதைத்தொடர்ந்து, பேரிடர் மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிக்காக ஸ்ரீநகருக்கு சென்றுள்ளது. 

    மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 30 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என மீட்டுப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அமர்நாத் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பு காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  

    மேக வெடிப்பு என்பது குறிப்பிட்ட நேரத்தில், அதிக கனமழை பெய்துவதாகும். இதனால், திடீரென பெரு வெள்ளம் ஏற்படும். 

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொடரும் நிலநடுக்கம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....