Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"விவோ" நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

    “விவோ” நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்- அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

    விவோ நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி சீனாவை சேர்ந்த கைப்பேசி நிறுவனமான விவோ மீது பதிவு செய்யப்பட்ட பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கின்படி, இந்தியா முழுவதும் விவோ நிறுவனத்துடன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டது. 

    இச்சோதனையானது உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் உள்பட தென்னிந்திய மாநிலங்களில் நடைபெற்றது. வரி செலுத்துவதை தவிர்க்க ரூ.62,476 கோடியை சட்டவிரோதமாக சீனாவுக்கு விவோ நிறுவனம் பரிவர்த்தனை செய்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. 

    இதனையடுத்து, விவோ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதை எதிர்த்து விவோ நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

    அந்த மனுவில், “ வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் சரக்கு வரி, சுங்க வரி போன்ற வரிகளை விவோ நிறுவனத்தால் செலுத்த இயலவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கான ஊதியம், நிறுவனத்துக்கான செலவுகள் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது விவோவின் வணிகத்தை, நிரந்தர முடிவுக்குக் கொண்டு செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

    விவோ நிறுவனத்தின் மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை இந்த மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து, ஜூலை 13-ம் தேதிக்கு இவ்வழக்குத் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளனர். 

    பள்ளிகளில் வேலைவாய்ப்புக்கான பதிவு ரத்து- தமிழக அரசு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....