Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜாமியா மஸ்ஜித்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது; கடும் கட்டுப்பாடு

    ஜாமியா மஸ்ஜித்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது; கடும் கட்டுப்பாடு

    வரலாற்றுப் புகழ்பெற்ற மிகவும் பழமை வாய்ந்த ஜாமியா மஸ்ஜித்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக, மத்திய ஜாமியா மஸ்ஜித்தின் அஞ்சுமன் அக்வாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், மசூதி வளாகத்தில் புகைப்பட கருவிகள் எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார். 

    மசூதி வளாகத்தில் புகைப்பட கருவிகளைக் கொண்டு எதையும் புகைப்படம் எடுக்க கூடாது என்றும், வளாகத்தில் உள்ள படங்களை புகைபபடம் எடுக்கவும் அனுமதி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்படி கருவிகளைக் கொண்டுவருபவர்கள் வாயிலிலேயே நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    அதே சமயம் உணவுப் பொருள்களை மசூதி வளாகத்தில் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய உணவு, நொறுக்குத்தீனி போன்ற எதுவும் எடுத்துச் செல்ல கூடாது. 

    குறிப்பாக பெண்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வர வேண்டும் என்றும், ஆண்களுடன் அமரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்காணிக்க மசூதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....