Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை- இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

    பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை- இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைய இருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 300 ஏக்கர் பரப்பளவில் ஆப்பிள் தொழிற்சாலை அமையும் எனவும் அதில் ஆப்பிள் போன்கள் தயாரிக்கப்படும் என மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிநுட்பத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    மேலும் ராஜிவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த தொழிற்சாலை மூலமாக கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக ஐபோன்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலை ஆப்பிள் தொழிற்சாலைகளில் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

    சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் பகுதியிலும் ஆப்பிள் தொழிற்சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....