Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇசையின் அதீத சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்

    இசையின் அதீத சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்

    இசை சத்தத்தைக் குறைக்க வேண்டும் என மணமகன் பலமுறை சொல்லியும் இசை நிறுத்தப்படாததால், மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

    பீகார் மாநிலம், சீதாமர்ஹி மாவட்டத்தில் இந்தர்வா என்ற கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தவிழாவில் மணமகனான சுரேந்திர குமார் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மணமேடையில் மணமகளுடன் அமர்ந்து இருந்தார். 

    அப்போது அங்கு, திருமண நிகழ்ச்சியில் அதீத சத்த இசையுடன் இளைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். சத்தம் அதிகமாக இருந்ததால், மணமகன் அதை குறைக்க பலமுறை கூறியுள்ளார். இருப்பினும் சத்தம் குறைக்கபடவில்லை. 

    இந்நிலையில், மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொண்டனர். அப்போது மணமகள் கழுத்தில் சுரேந்திர குமார் மாலை அணிவித்த நொடியே அவர், மணமேடையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனே மணமகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணமகன் இறந்ததாக தெரிவித்துள்ளனர். 

    இசையின் பலத்த சத்தம் காரணமாக சுரேந்திர குமார் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. 

    ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வாய்ப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....