Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

    கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

    கேரளாவில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பள்ளி சுற்றுலா சென்ற 15 வயது மாணவர்கள் 3 பேர் மாங்குளம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

    நேற்று முன்தினம் அங்கமாலியில் உள்ள ஜோதிஸ் சென்ட்ரல் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 30 பேர் பள்ளி சுற்றுலாவுக்காக மாங்குளம் சென்று இருந்தனர். 

    இந்நிலையில், ஆற்றில் ஆழம் குறைந்த பகுதியில் 5 மாணவர்கள் சிக்கினர். இதையடுத்து, மற்ற மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

    அவர்களில் இரண்டு மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில்,  மேலும் 3 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

    இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இசையின் அதீத சத்தத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த மணமகன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....