Saturday, May 4, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்முடங்கிய இன்ஸ்டாகிராம்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

    முடங்கிய இன்ஸ்டாகிராம்.. வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

    இந்தியாவைப் பொருத்தவரை நேற்றிரவு 10.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. 

    சமூக வலைதளங்களை பொருத்தவரையில் இன்ஸ்டாகிராம் தளமானது மிகவும் பிரபலமான ஒன்றாகும். இந்த இன்ஸ்டாகிராம் செயலியானது இளைஞர்கள் மத்தியில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியது. இதனால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். சமூக வலைத்தளங்களில் ஒன்றான ,தற்போதும் அதிகம் பேர் பயன்படுத்தக் கூடிய இன்ஸ்டாகிராம் செயலி அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற பகுதிகளில் நேற்று இரவு ஒரு மணி நேரம் முடங்கியது.

    இந்தியாவைப் பொருத்தவரை நேற்றிரவு 10.30 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சேவை பாதிப்பை உறுதி செய்த அந்நிறுவனம் சில மணி நேரங்களில் சேவையை சரிசெய்தது. இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து நெட்டிசன்கள் அதனை சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....