Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇப்படியும் ஒரு கொண்டாட்டமா? "பிறந்த நாள் பாயை Ghost Rider-ஆக" மாற்ற முயன்ற நண்பர்கள்!

    இப்படியும் ஒரு கொண்டாட்டமா? “பிறந்த நாள் பாயை Ghost Rider-ஆக” மாற்ற முயன்ற நண்பர்கள்!

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சக நண்பன் ஒருவன் பிறந்தநாள் கொண்டாடும் நண்பனின் தலையில் தீ வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிறந்தநாள் கொண்டாடும் முறையானது மாறுபட்டபடியே இருக்கிறது. கேக் வெட்டுவது, ஆடல் பாடல் எல்லாம் ஒரே மாதிரியாக தெரிந்தாலும், நுட்பமாக பார்த்தால் மாறுபாடுகள் புலப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போது விளையாட்டாக பிறந்தநாள் கொண்டாடுபவரை அடித்தும், அவரின் மீது ரசாயனங்களை ஊற்றுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. 

    இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சக நண்பன் ஒருவன் பிறந்தநாள் கொண்டாடும் நண்பனின் தலையில் தீ வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    வைரலாகி வரும் காணொளியின்படி, பைக்கின் மேல், கேக் வெட்ட வைத்து, நண்பனின் தலையில் ஸ்ப்ரே அடித்து விளையாட, அச்சமயத்தில் நண்பன் ஒருவன் அவன் தலையில் தீ வைத்து விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் நண்பர்களே சிரித்துக்கொண்டு அந்த தீயை அணைக்கின்றனர். இதை பார்த்த நெட்டிசன்கள் பலவித கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ‘பிறந்த நாள் பாயை Ghost Rider-ஆக மாற்றும் முயற்சியா’ என்றெல்லாம் கலாய்த்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....