Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா8 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

    8 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி

    உத்தரபிரதேசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 8 பேரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் விகாஸ் தாக்கூர். இந்நிலையில் இவருக்கும் 17 வயதுடைய சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் இவர்கள் நேரில் சந்திக்கின்ற அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் விகாஸ் தாக்கூர் சிறுமியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுத்துள்ளார். அதோடு இவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக விகாஸ் தாக்கூர் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

    இந்நிலையில், கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த அந்தச் சிறுமியை தொடர்புகொண்டு அழைத்த விகாஸ் தாக்கூர் தன்னை வந்து ஓட்டலில் சந்திக்க சொல்லி மிரட்டியுள்ளார். இதையடுத்து பயந்து வந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலக்கி கொடுத்துள்ளார்.

    இதில் மயங்கிய சிறுமியை ஊருக்கு வெளியே கொண்டு சென்று பலாத்காரம் செய்துள்ளார். இவரைத்தொடர்ந்து 5 பேர் அந்தச் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. 

    பிறகு அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். பிறகு அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில் விகாஸ் தாக்கூர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர். 

    பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆயிரக்கணக்கில் ஊழியர்களை நிறுத்தும் மெட்டா – அதிர்ச்சி தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....