Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுளத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 40 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

    குளத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 40 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

    மேற்கு வங்கத்தில் குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். 

    மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ எடை உள்ள 40 தங்க பிஸ்கட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்தனர். எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்த தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 2.57 கோடி என்று சொல்லப்படுகிறது. 

    மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்க பிஸ்கட்டுகளை குளத்தில் பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

    ஆயிரக்கணக்கில் ஊழியர்களை நிறுத்தும் மெட்டா – அதிர்ச்சி தகவல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....