Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்இனி இருமல் வந்தா 'நோ' மருந்து; 99 குழந்தைகள் பலியானதால் இந்தோனேசியா அதிரடி நடவடிக்கை

    இனி இருமல் வந்தா ‘நோ’ மருந்து; 99 குழந்தைகள் பலியானதால் இந்தோனேசியா அதிரடி நடவடிக்கை

    இந்தோனேசியாவில் இந்த ஆண்டில் மட்டும் 99 குழந்தைகள் இறந்ததன் எதிரொலியாக, அந்த நாட்டில் அனைத்து வகையான இருமல் மருந்துகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இந்திய மருந்து நிறுவன தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கைவிடுத்தது. 

    குழந்தைகளின் உயிரிழப்புக்கு மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் தயாரிப்புகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அந்த எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்புவிடுத்தது. இந்நிலையில், இருமல் மருந்தால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இருமல் மருந்துகள் மீதான தடை குறித்து இந்தோனேசிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

    இருமல் மருந்து காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டதால் நடப்பு ஆண்டு மட்டும் 99 குழந்தைகள் உயிரிழந்தன. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 5 வயதுக்குட்டப்பட்டவர்கள் ஆவர். இந்த இருமல் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதா? அல்லது உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்டதா? என்பது குறித்து தெளிவான தகவல் தெரியவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் இறப்பு காரணமாக இருமல் மருந்துகள் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உயிரிழப்பை ஏற்படுத்திய இருமல் மருந்துகளின் பெயர்களை இந்தோனேசிய அரசு வெளியிடாமல் உள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கையானது அரசு வெளியிட்டுள்ளதைவிட கூடுதலாக இருக்கலாம் என இந்தோனேசிய சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: அலுப்பு தட்டாத நம்ம ஊர் சூப்பர் ஹிரோ படம்….மின்னல் முரளி மின்னியதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....