Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைஅலுப்பு தட்டாத நம்ம ஊர் சூப்பர் ஹிரோ படம்....மின்னல் முரளி மின்னியதா?

    அலுப்பு தட்டாத நம்ம ஊர் சூப்பர் ஹிரோ படம்….மின்னல் முரளி மின்னியதா?

    சூப்பர் ஹீரோக்கள் கதை என்றாலே பலருக்கு விருப்பமான ஒன்றுதான். சிறு வயது நபர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் விரும்பும் கதைகள்தான் இந்த சூப்பர் ஹீரோக்களுடையது. முதன்முதலில் புத்தகங்களில் கதைகளாக ஆரம்பித்து, தற்போது 3d தொழில்நுட்பம் வரை சூப்பர் ஹீரோக்களின் பயணம் வந்திருக்கிறது. ஆனாலும் அலுப்பு தட்டாத ஒன்றாகவே இதுவரை சூப்பர் ஹீரோக்கள் கதை இருந்து வருகிறது.

    இப்படியான சூப்பர் ஹீரோக்கள் நம் இந்தியாவில் இருந்து வந்ததில்லை என்ற கூற்று தொடர்ந்து இருந்து வர, ரித்திக் ரோஷனின் க்ரிஷ் திரைப்படம் அதுக்கு பதிலாக அமைந்தது. ஆயினும் அதன் பின்பு வந்தவைகள் மீது பெரியாதாய் பலருக்கு ஈர்ப்பில்லை. சூழல்கள் இப்படியாக நிலவ நமது சவுத் இந்தியாவில் இருந்து வெளியான மூகமுடி, ஹீரோ போன்ற சூப்பர் ஹீரோக்கள் திரைப்படங்களும் சறுக்கியது. இனி சூப்பர் ஹீரோக்கள் கதை நம் பக்கமிருந்து செல்லாது என தென்னிந்திய திரையுலகம் நினைக்க, மின்னல் முரளி எனும் திரைப்படத்தின் மூலம் அந்த நினைப்பை பொய்யாக்கியது, மலையாள திரையுலகம்.

    ஆம்! நெட்ஃப்ளிக்ஸில் கடந்த வருடம் டிசம்பர்  24- ம் தேதி வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படம்தான், மின்னல் முரளி! டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் போன்றோர் நடிக்க பாசில் ஜோசப்  இப்படத்தை இயக்கியிருந்தார். நெட்ப்ளிக்ஸால் மிகவும் அதிகமாய் ப்ரோமட் செய்யப்பட்ட மின்னல் முரளி, இந்தியரகளினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவெடுத்தது.

    படத்தின் கதாநாயகன் தனது காதல் தோல்வியில் இருக்க, அச்சமயத்தில் மின்னல் வந்து தாக்குகிறது. அதே சமயத்தில் இன்னொருவரையும் மின்னல் தாக்குகிறது. இந்த இருவரின் வாழ்வும் தனித்தனியே நிகழ அது ஒரு மையப்புள்ளியில் இணைந்து பின் பெருவெடிப்பாய் வெடிக்கிறது. இதுதான் கதையின் அடித்தளம்! 

    படத்தின் நாயக கதாப்பாத்திரமும் சரி, வில்லன் கதாப்பாத்திரமும் சரி வடிவமைக்கப்பட்ட விதம் மிகவும் பாராட்டக்குரியது. ஒரு சிறிய தொகையிலான மனிதர்களை கொண்ட ஒரு கிராமம். இப்படத்தின் திரைக்கதை முழுவதும் இந்த ஒரே கிராமத்தில்தான் நகர்கிறது.

    நகைச்சுவை நிகழ்வுகள், கிராம மக்கள், நாயக கதாப்பாத்திரத்தின் குடும்பம், கிராம தின நிகழ்வுகள் என படத்திற்கு அனைத்தும் பலமாய் அமைந்திருக்கின்றன. படம் வெளியாகும் முன்பே இந்த சூப்பர் ஹீரோ கதை இதுக்குள்தான் என படக்குழுவே முன்னோட்டங்களின் மூலம் அறிவித்தமையால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது பிரம்மாண்டங்களை நோக்கிச்செல்லாமல் கதையை நோக்கி சென்றுவிட்டது.

    படத்தின் முதல் பாதியில் நிறைய சிறிய சிறிய நிகழ்வுகளால் நம்மை படம் ஈர்க்கின்றன. நம் முகத்தில் புன்னகையை விதைக்கின்றன. காவல்துறையாய் வரும் கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் நிகழ்வுகள் நகைச்சுவையை மெல்ல மெல்ல கடத்துகின்றன. டொவினோ தாமஸ் மின்னல் முரளிக்காகவே தன்னை இவ்வளவு வருடம் தயார் செய்தது போல் இருக்கிறார்.

    பெரும்பாலான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் பொதுப்படையான நிகழ்வுகளுக்குள் சென்று அதனுள் இருக்கும் நல்லது தீயதை சண்டையிட வைப்பார்கள். ஆனால் மின்னல் முரளியில் முதலில் நாயக மற்றும் வில்லன் கதாபாத்திரங்களின் உள்ளுக்குள் சென்றுவிட்டு, பிறகு இருவரின் உள்ளுணர்வில் நிகழும் மாறுபாடுகளும் பொதுக்களத்த்தில் எவ்வாறு வெளிப்படுகிறது எனபதை காண்பித்திருக்கும் விதம் வியப்புதான்.

    ஆரம்பத்தில் கூறியது போல இருவருக்கும் ஒரே மின்னல் தாக்கிதான் சக்திகள் கிடைக்கிறது. அதாவது இருவரும் ஒரே பலம் கொண்ட எதிரெதிர் சக்திகள். சம பலத்தை கொண்ட இருவரும் மோதிக்கொள்ளும்படி செய்ததும் பாராட்டக்குரியதே. குரு சோமசுந்தரத்தின் நடிப்பு திரைப்படத்தின் மிக உச்சமான நடிப்பு என்று கூறலாம். அவரை பற்றி அதிகம் கூறினால் படம் பார்க்கும்போது உங்களுக்கு புதியதாய் தோன்றாமல் வியக்காமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது.

    திரைப்படத்தில் சறுக்கிய இடமென்று பார்த்தால், த்ரில்லிங் உணர்வை தரவைக்க அத்தனை வாய்ப்புகள் இருந்தும், திரைப்படத்தில் அப்படியான உணர்வு நமக்கு கடத்தப்படவே இல்லை. இது மிகப்பெரிய சறுக்கலாய் பார்க்கப்படுகிறது. வாழ்வா? சாவா? என்ற ரீதியிலான காட்சிகள் வரும்போதும் படம் பார்க்கும் நமக்கு அந்த பதைபதைப்பு பெரியதாய் ஒட்டிக்கொள்ளவில்லை. கிளைமாக்ஸ் காட்சிகளில் கிராபிக்ஸ் நம்மை கொஞ்சம் சோதிக்கின்றன என்றுதான் கூற வேண்டும். 

    திரைப்படத்தில் போனஸாக பார்த்தால், டொவினோ தாமஸுக்கு கூறப்படும் ஃபிளாஸ்பேக். காட்சியாய், கதையாய் அந்த ஃ பிளாஸ்பேக் பெரிதும் அடர்த்தியாய் காணப்படுகிறது.

    பாசில் ஜோசப் இயக்கத்தில், நெட்ப்ளிக்ஸில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மின்னல் முரளி திரைப்படத்தை, நம் பூர்வத்தை மையமாக கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படம் வராதா என்று எண்ணியவர்கள் நிச்சயம் பார்க்கலாம். சூப்பர் ஹீரோ திரைப்படம் பிடிக்காதவர்கள் என்று கூறுபவர்கள் கூட இப்படத்தை காணலாம். 

    இதையும் படிங்க: ஏலத்திற்கு வரும் சார்லஸ் – டயானா திருமண கேக்; 41 ஆண்டுகள் ஆனாலும் மவுசு குறையல!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....