Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா - வெளிவந்த ரிப்போர்ட்

    புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இந்தியா – வெளிவந்த ரிப்போர்ட்

    உலகளவில் புலம்பெயர்ந்தவர்களின் பட்டியலில் 18 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 

    உலகம் முழுவதும் கல்வி, வேலை, வறுமை, ஆசை, போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் புலம்பெயர்தலானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கூட உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் உக்ரைன் நாட்டு மக்களில் சிறு பகுதியினர் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். 

    மேலும், பல நாட்டு குடிமகன்கள் வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். இதனால், சமீபத்தில் மக்கள் புலம்பெயர்தல் குறித்த கணக்கீடு ஒன்று நடத்தப்பட்டது. 

    அந்த கணக்கீட்டின்படி, 18 மில்லியன் இந்தியர்கள் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்துள்ளனர். புலம்பெயர்தல் பட்டியலில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. 

    இந்தியாவைத் தொடர்ந்து 11.2 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் மெக்சிகோ இரண்டாம் இடத்திலும், 10 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் சீனா மற்றும் ரஷ்யா முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களிலும் உள்ளன. 

    இந்தியர்கள் பலர் கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

    வாரிசு மற்றும் துணிவின் முதல் காட்சிகள் எப்போது? – வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....