Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிமுதல்வரை அவதூறாக பேசிய எம்.எல்.ஏ; புகார் கொடுத்த ஆளுங்கட்சியினர்..

    முதல்வரை அவதூறாக பேசிய எம்.எல்.ஏ; புகார் கொடுத்த ஆளுங்கட்சியினர்..

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது நடவடிக்கை எடுக்க கோரி, என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.ஜியிடம் புகார் மனு அளித்தனர்.

    புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தலைமையில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏனாமில் நடைபெற்று வரும் அரசு விழாவில் நிறைவு நாளன்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ரங்கசாமி வருகை புரிந்தால் அவருக்கு தொகுதி மக்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுப்போம் என்றும், பொதுமக்கள் செருப்பு தூக்கி வீசுவார்கள் என்றும் எம்எல்ஏ அசோக் தெரிவித்து இருந்தார். இதற்கு புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரசு கொறடாவும் சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன், ஆகியோர் காவல் துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி சந்திரனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அந்த புகாரில் முதலமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூராக பேசிய ஏனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தியா vs இலங்கை; இன்று நடைபெறும் இறுதிப்போட்டி… வெற்றி யாருக்கு?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....