Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்; நடவடிக்கை எடுத்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

    சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர்; நடவடிக்கை எடுத்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ்!

    சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்களது விமானத்தில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. 

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நியூயார்க் நகரில் இருந்து புறப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை தில்லி வந்துக் கொண்டிருந்த நிலையில், அதில் இருந்த பயணி ஒருவர் அதிகமாக மது அருந்தியுள்ளார். மேலும் அருகில் இருந்த பயணிகளிடம் தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் பேசியும் வந்துள்ளார். 

    இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சக பயணிகள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விமான ஊழியர்கள் அந்தப் பயணியை எச்சரித்துள்ளனர். மேலும் குடிபோதையில் இருந்த அந்த விமான பயணி, தனது அருகே அமர்ந்து இருந்த சக ஆண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுகிறது. 

    இதைத்தொடர்ந்து, அந்த மது போதையில் இருந்த பயணியிடம் விமான ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் தூக்கத்தில் சிறுநீர் கழித்துவிட்டதாகவும், தன்னை மன்னிக்குமாறும் அந்தப் பயணி கேட்டுள்ளார். அதே சமயம், பாதிக்கப்பட்ட பயணியும் அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். 

    இருப்பினும், சனிக்கிழமை தில்லி விமான நிலையத்துக்கு விமானம் வந்ததும், ஊழியர்கள், அவரை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைத்தனர். 

    இந்நிலையில், நியூயார்க் நகரத்தில் இருந்து தில்லி வந்த விமானத்தில் சக பயணி மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் இந்திய மாணவருக்கு தங்களது விமானங்களில் பயணம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது.

    மேலும் இந்திய மாணவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 

    நிறைவடைந்தது ருத்ரன் படப்பிடிப்பு; ரிலீஸ் எப்போது தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....