Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்தொடர்ந்து நான்காவது நாளாக சரியும் பங்குச்சந்தைகள்! படுகுழியில் பஜாஜ்!

    தொடர்ந்து நான்காவது நாளாக சரியும் பங்குச்சந்தைகள்! படுகுழியில் பஜாஜ்!

    தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்துள்ளன. உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் பதற்றத்தினால் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ந்து வருகின்றன.

    கச்சா எண்ணைக் கொள்முதலில் மூன்றாவது பெரிய நாடகத் திகழும் இந்தியாவிற்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. பிற நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவீக்கமும், அதனைக் குறைக்க அதிகப்படுத்திய வட்டி விகிதங்களும் இந்திய வர்த்தகத்தினை மட்டுமல்லாது உலக அளவிலான வர்த்தகத்தினையும் பாதித்து வருகின்றது.

    புதன்கிழமையான இன்று, நிஃப்டி 72.95 புள்ளிகள் குறைந்து 16,167.10ஆகவும், சென்க்செஸ் 276.46 புள்ளிகள் குறைந்து 54,088.39ஆகவும் உள்ளது. இன்றைய நிப்டி, சென்க்செஸ் மதிப்பானது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

    பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ் அதிக சரிவை சந்தித்துள்ளன. அதிகபட்சமாக ஸ்ரீ சிமெண்ட்ஸ் நான்கு சதவீதம் சரிந்துள்ளது. ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி, இண்ட்ஸ்லேன்ட் பேங்க் மற்றும் தொழில்நுட்பத் துறைகளாகிய இன்போசிஸ் மற்றும் விப்ரோ அதிக ஏற்றத்தில் உள்ளன.

    டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் பெரிய மற்றம் ஏதும் இல்லாமல், டாலருக்கு 77.28 ரூபாயாக உள்ளது. 

    தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது, 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 59 ருபாய் குறைந்து 4787 ரூபாயாகவும், சவரனுக்கு 472 ருபாய் குறைந்து 38,296 ரூபாயாக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.3 ருபாய் குறைந்து 64.80 ரூபாயாகவும், சவரனுக்கு 10.40 ருபாய் குறைந்து 518.40 ரூபாயாகவும் உள்ளது.

    மண்ணில்லாமல் விவசாயமா? குறைந்த செலவில் அதிகப்படியான மகசூல் – தகவல்கள் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....