Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள்

    இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்திய அணியானது இங்கிலாந்தில் தற்போது விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியானது, டெஸ்ட் தொடர் மட்டும் அல்லாது,  மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

    அதன்படி, ஒருநாள் தொடரில் இந்திய அணி சார்பாக, ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கும் ஒருநாள் போட்டியானது இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

    நயன்தாராவை ‘அடி அழகா சிரிச்ச முகமே ….’ என வருணித்த விக்னேஷ்சிவன் – ‘நான் பிழை’ பாடல் ஒரு பார்வை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....