Tuesday, May 7, 2024
மேலும்
    Homeஅறிவியல்இந்தியர்களின் ஆயுட்காலம் 5 வருடம் குறையப் போகிறது - சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

    இந்தியர்களின் ஆயுட்காலம் 5 வருடம் குறையப் போகிறது – சிகாகோ பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

    காற்று மாசு காரணமாக இந்தியர்களின் சராசரி ஆயுள் 5 ஆண்டுகள் குறையும் என சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஏர் குவாலிடி லைஃப் இன்டேக் அமைப்பு காற்று மாசுபாடு ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக விரிவான ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆராய்ச்சியில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 வருடங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது.

    அதாவது, பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசுபாடு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

    அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. 2020-ம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையிலும், நாட்டில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது.

    இதே நிலை நீடித்தால் டெல்லி மக்களின் சராசரி ஆயுள் 10.1 ஆண்டுகள், உத்தரப்பிரதேச மக்களின் சராசரி ஆயுள் 8.9 ஆண்டுகள், பீகார் மக்களின் ஆயுள் 7.9 ஆண்டுகளாக குறையும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

    இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் எனத் தெரிய வந்துள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் காற்றை மாசுபடுத்தாமல் இருப்பது, நமக்கும், நமக்கு பின் வரும் சந்ததிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.

    காவல் வாகனத்தின் மேல் ஒரு உல்லாசப்பயணம் சென்ற வாலிபர்..!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....