Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்!

    கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்கும் சச்சின் டெண்டுல்கர்!

    சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் போட்டிக்கான தொடருக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாலைப் பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் என்கிற இருபது ஓவர் போட்டி, கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் பருவம் கடந்த வருடம் நிறைவுபெற்றது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. 

    முன்னதாக, கடந்த வருடம் ராய்ப்பூரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக தொடர் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

    இந்நிலையில் இந்த வருட சாலைப் பாதுகாப்பு இருபது ஓவர் போட்டியில் பங்கேற்பதற்கான சச்சின் தலைமையில் இந்திய லெஜண்ட்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் போட்டி செப்டம்பர் 10 முதல் தொடங்குகிறது. மேலும், கான்பூரில் முதல் ஆட்டமும் அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்கள் ராய்பூரிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 1 அன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. 

    இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    சச்சின் தலைமையிலான இந்திய லெஜண்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:சச்சின் டெண்டுல்கர் (கேப்டன்), யுவ்ராஜ் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், முனவ் படேல், பத்ரிநாத், ஸ்டூவர்ட் பின்னி, நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), கோனி, பிரக்யான் ஓஜா, வினய் குமார், அபிமன்யூ மிதுன், ராஜேஷ் பவார், ராகுல் சர்மா.

    பட்டா ரத்து: ‘மாயாஜால்’ திரையரங்குக்கு எதிராக ஐகோர்ட் உத்தரவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....