Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள்; 2-வது இடத்தில் தமிழகம்

    தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள்; 2-வது இடத்தில் தமிழகம்

    தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய குற்ற ஆவண காப்பகம் இருக்கிறது. இது தற்போது, கடந்த 2021-ம் ஆண்டு நடந்த குற்றங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    அந்த புள்ளிவிவர அறிக்கையின் படி, கடந்த 2021-ம் ஆண்டு தேசத்துக்கு எதிரான குற்றச் செயல்களுக்காக 5,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு மட்டும் 14 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    இந்த விவரங்கள், கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை காட்டிலும் குறைவாகும்.

    தேசத்துக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேச மாநிலம் 1,862 வழக்குகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 654 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

    இதனைத்தொடர்ந்து, தேசத்துக்கு எதிரான குற்றங்களில் அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    அதேபோல், தேசத்துக்கு எதிரான குற்ற வழக்குகளில் 4,069 வழக்குகள் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்குகள் ஆகும்.

    மேலும், 76 தேசத்துரோக வழக்குகள், 814 ‘உபா’ சட்ட வழக்குகள், 55 அரசாங்க ரகசிய சட்ட வழக்குகள் ஆகியவை கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவாகி உள்ளன. 

    அந்த வகையில், தேசத் துரோக வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம் ஆகும். அங்கு மட்டும், 29 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல், ‘உபா’ சட்ட வழக்குகள் மணிப்பூர் மாநிலத்தில் அதிகமாக பதிவாகியுள்ளன. இங்கு மட்டும் 157 ‘உபா’ சட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. 

    மேலும், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 8,600 வழக்குகளின் விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : சாலை விபத்துகளில் சென்னை முதலிடம்; தமிழகத்துக்கு எத்தனையாவது இடம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....