Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஐ.நா.பாதுகாப்பு குழு கூட்டம்: பாக்கிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

    ஐ.நா.பாதுகாப்பு குழு கூட்டம்: பாக்கிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

    ஐ.நா.பாதுகாப்பு குழு கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பற்றி பேசிய  பாகிஸ்தானுக்கு இந்திய தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. 

    ஐக்கிய நாடுகளின் பொது சபை பாதுகாப்பபு கவுன்சில் கூட்டத்தின் பொழுது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சீராய்வு தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீர் குறித்து பேசியது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. 

    இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் தெரிவித்துள்ளதாவது:

    ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க கூடியிருக்கிறோம். ஆனால் பாகிஸ்தான் பிரதிநிதி மீண்டும்  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் மீது தேவையற்ற குறிப்புகளை வைத்துள்ளார். 

    பாகிஸ்தான் பிரதிநிதி என்ன நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் பொய்களை பரப்புகிறது; பலதரப்பு மன்றங்களின் புனிதத்தை துஷ்பிரயோகம் செய்யும் கெட்ட பழக்கம் பாகிஸ்தானிடம் இருக்கிறது. இதனால், பாகிஸ்தான் கூட்டு அவமதிப்புக்கு தகுதியானதாக இருக்கிறது என்று  பிரதிக் மாத்தூர் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க2024 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதுவே தனது கடைசி தேர்தல்: சந்திரபாபு நாயுடு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....