Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்2024 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதுவே தனது கடைசி தேர்தல்: சந்திரபாபு...

    2024 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதுவே தனது கடைசி தேர்தல்: சந்திரபாபு நாயுடு

    வருகிற 2024 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதுவே தனது கடைசி தேர்தல் என தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பத்திக்கொண்டாவில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 17) நடந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

    ஆந்திர சட்டசபையில் அராஜக முறையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் ஜெகன்மோகன் அரசு செயல்பட்டு வருகிறது.

    எனது மனைவி குறித்தும், குடும்ப வாழ்க்கை குறித்தும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவமானப்படுத்தினர். இனி முதல்வராக மட்டுமே சட்டசபைக்குள் வருவேன் என சபதம் செய்துவிட்டு வெளியேறினேன்.

    அதனால், வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றிபெற்று நான் மீண்டும் முதல்வர் பொறுப்பை ஏற்றால் மட்டுமே அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன்.

    இல்லையென்றால் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிக் கொள்வேன். அதனால், நான் அரசியலில் இருப்பதும், இல்லாததும் வாக்காளர்களிடம்தான் இருக்கிறது.

    இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.

    இதையும் படிங்கராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....