Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘தேவதையின் குரல் இப்படியாகத்தான் இருக்கும்’ - தனுஷ் போட்ட ட்விட்!

    ‘தேவதையின் குரல் இப்படியாகத்தான் இருக்கும்’ – தனுஷ் போட்ட ட்விட்!

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பதிவிட்ட காணொளிக்கு தனுஷ் பதிலளித்துள்ளது, ரசிகர்களை சிலாகிக்க வைத்திருக்கிறது. 

    நடிகர் தனுஷ் நடிப்பில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில்,  சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இப்படத்திற்கு ஜி..வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, ‘வாத்தி’ திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், சுவேதா மோகன் குரல் கொடுக்க, நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுத ‘வா வாத்தி’ எனும் பாடல் யூடியூப் தளத்தில் வெளிவந்து ரசிகர்களை கவரந்து வருகிறது. 

    இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு காணொளி ஒன்றை பதிவுசெய்துள்ளார். அதில், குழந்தை நட்சத்திரம் மேகனா சமீபத்தில் வெளிவந்த ‘வா வாத்தி’ பாடலை பாடுகிறார். அற்புதமாக பாடும் மேகனாவை இளம் மேதை என்று பாராட்டி பதிவிட்டிருந்தார். 

     இந்த காணொளியைக் கண்ட நடிகர் தனுஷ், ‘தேவதையின் குரல் இப்படியாகத்தான் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் குழந்தை நட்சத்திரம் மேகனா பாடிய காணொளியை சிலாகித்து வருகின்றனர். 

    முன்னதாக, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வா வாத்தி’ பாடலை தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் பாடிய காணொளியை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்கதெலுங்கிலும் கல்லா கட்டப்போகும் ‘லவ்-டுடே’..வாழ்த்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா..

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....