Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

    ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல்

    ராமஜெயம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொள்வதாக சம்மத மனுக்களை தாக்கல் செய்தனர்.

    தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன்பிறகு, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    முன்னதாக உண்மை சோதனை நடத்துவதற்காக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேருக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பட்டது. மேலும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.

    இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, சிவா, ராஜ்குமார், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். இந்தச் சோதனைக்கு தென்கோவன் என்கிற சண்முகம் சம்மதம் தெரிவிக்கவில்லை. 

    அதேபோல் மோகன் ராம், தினேஷ், நரைமுடி கணேசன், செந்தில் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகாமல் இருந்ததால், அவர்கள் இன்று நடைபெற்ற விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என முன்னதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

    இந்நிலையில், இன்று 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜரான நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொள்வதாக சம்மத மனுக்களை தாக்கல் செய்தனர். 

    இதையடுத்து, இந்த விசாரணை வருகிற 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி சிவக்குமார், விசாரணை நடைபெறும் தினம் 12 பேரும் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு அதற்கான சான்றுகளுடன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அதற்கான உத்தரவு அன்றைய தினமே பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்கஅத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....