Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கைக்கு எதிரான முதல் போட்டி; 'த்ரில்' வெற்றிப் பெற்ற இந்தியா...

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டி; ‘த்ரில்’ வெற்றிப் பெற்ற இந்தியா…

    இலங்கைக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. 

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நேற்று முதலாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. 

    மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கில் களம் கண்டது. 

    இந்திய அணித் தரப்பில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷண் மற்றும் சுப்மன் கில் களமிறங்க, சுப்மன் கில் 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 

    சிறப்பாக விளையாடி வந்த இஷன் கிஷண் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 29 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதன் பின்னர் இணைந்த தீபக் ஹூடா – அக்ஸர் படேல் கூட்டணி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

    மொத்தத்தில் இந்திய அணி , 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. 

    இலங்கை அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாற, இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த கட்டமாக பதும் நிசங்கா 28 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 160 ரன்களை எடுத்து நூலிழையில் வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் இழந்தது. 

    இந்திய அணித் தரப்பில், இந்த போட்டியின் மூலம் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அறிமுகமான இந்திய வீர்ர் ஷிவம் மாவி, 4 ஓவர்களில் 22 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.  இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

    அடுக்குமாடி குடியிருப்பில் ‘தீ-‘யில் கருகிய வாகனங்கள்; வழக்குப் பதிந்த காவல்துறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....