Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் அமலுக்கு வந்த அறிவிப்பு!

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் அமலுக்கு வந்த அறிவிப்பு!

    தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

    அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தற்போதே மக்கள் தீபாவளிக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளது. 

    இதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 05.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    தேவைக்கேற்ப ஆட்டோக்காரின் இயக்கமானது, தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகினி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு டார்மான் சாலை மற்றும் கோட்ஸ் காலம் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாவரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டைச் சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்ல தடை செய்யப்படும்.

    இதையும் படிங்க: இந்திய விமானப் படையின் வரலாற்று சிறப்புமிக்க புதிய கிளை நடவடிக்கை!

    சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி.நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும், இத்தகைய வாகனங்கள் இரவு 2.00 மணி முதல் காலை 7.00 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும். 

    ஏற்கனேவே, பயன்பாட்டில் உள்ள தியாகராய சாலை, சிசன் பெட்டி சாலை மற்றும் தனிகாசலம் சாலை வாகன நிறுத்தமிடங்கள் தவிர விடுமுறை நாட்களில் பிரகாம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி, பாஷ்யம் சாலையில் உள்ள இராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி மற்றும் தண்டபானி சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். 

    மேலும், பொதுமக்களும் வணிகர்களும் போக்குவரத்து காவல் துறையினருக்குத் தக்க ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....