Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய விமானப் படையின் வரலாற்று சிறப்புமிக்க புதிய கிளை நடவடிக்கை!

    இந்திய விமானப் படையின் வரலாற்று சிறப்புமிக்க புதிய கிளை நடவடிக்கை!

    இந்திய விமானப் படையின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக ஆயுத அமைப்புகள் என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

    இதுகுறித்து, வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும். இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.

    இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும் 

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க:உலகின் நான்காவது வலிமையான இந்திய விமானப்படை! நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்கள்

    இதனிடையே, 90-வது விமானப்படை தினம் இன்று (அக்டோபர் 08) சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

    அப்போது பேசிய ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி, “விமானப்படை அதிகாரிகளுக்காக ஆயுத அமைப்பு கிளை ஒன்றை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு, செயல்பாட்டுக் கிளை ஒன்று உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால், அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடிவதுடன், ரூ.3,400 கோடி வரை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....