Saturday, March 16, 2024
மேலும்
    Homeசிறப்பு கட்டுரைஉலகின் நான்காவது வலிமையான இந்திய விமானப்படை! நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்கள்

    உலகின் நான்காவது வலிமையான இந்திய விமானப்படை! நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்கள்

    விண்ணை தொட்ட இந்தியா ! Indian Air Force day !

    நம் இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் முப்படைகள் உள்ளன. அதில் மிக முக்கியத்துவம் பெற்றது “இந்திய விமானப்படை”. இந்திய மக்களின் நலனுக்காக ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை துச்சமென மதித்து நம் நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாக்கின்றனர். அது வானளவு உயர்ந்து ” நம் நாட்டின் வான பரப்பையும் பாதுகாத்து வருகிறது ” இந்திய விமானப்படை. இத்தகைய சிறப்பு மிக்க பணியை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி ‘இந்திய விமானப்படை தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    உலகின் நான்காவது பெரிய விமானப்படை என்ற பெருமையும் இந்திய விமானப்படையையே சேரும்.

    இப்படியாக இந்தியா விண்ணை தொட்ட கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க !

    சரியாக 80 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் அரசு இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் அக்டோபர் 8, 1932-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது தான் ” இந்திய விமானப்படை “. முதலில் வெறும் 25 வீரர்களுடன் தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படை பங்குகொண்ட முதல் போர் இந்தியாவிற்க்காக நடந்தது கிடையாது.
    இரண்டாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் நேசநாட்டு படையாக இந்தியா பங்குகொண்டது.

    இரண்டாம் உலகப்போரில் , பர்மாவில் இருந்து ஜப்பானிய விமானப்படைகள் முன்னேறி வருவதை தடுக்கும் பணியில் இந்தியா இருந்தது. அந்த பணியில் இந்திய விமானப்படை சிறப்பாக செயல்பட்டதால் ‘ royal Indian air force’ என்ற பெயரை இந்திய விமானப்படைக்கு அளித்து கௌரவித்தது பிரிட்டிஷ் அரசு. அதன் பிறகு ராயல் இந்திய விமானப்படையாக பெயர் மாற்றம் அடைந்தது இந்திய விமானப்படை.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் அரசுக்கு கீழ் செயல்பட்டு வந்த இந்திய விமானப்படை, இந்திய அரசின் கீழ் செயல்பட தொடங்கியது.

    1950-ஆம் ஆண்டு.. இந்தியா, தனி குடியரசு நாடக மாறிய பிறகு, ராயல் இந்திய விமானப்படை என பெயர் கொண்டிருந்த இந்திய விமானப்படையின் பெயரில் ராயல் நீக்கப்பட்டு ” இந்திய விமானப்படை அதாவது ‘Indian air force’ என்று மாற்றப்பட்டது.

    1950-ல் தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் 4 போர்களிலும், சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டிருக்கிறது. ஆப்ரேஷன் விஜய், ஆபரேஷன் மேகதூத், ஆப்ரேஷன் காக்டஸ், ஆப்ரேஷன் பூமாலை உள்ளிட்ட முக்கிய வான்வெளி நிகழ்வுகளை இந்திய விமானப்படை நடத்தியிருக்கிறது.

    இது மட்டுமில்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் இந்திய விமானப்படை பங்கெடுத்து இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறது.

    1933-ம் ஆண்டு முதல் இன்று வரை இந்திய விமானப்படை விமானங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் வட்ட வடிவ சின்னம் 4 முறை மாற்ற பட்டிருக்கிறது. இப்போது தேசியக் கொடி வண்ணத்தில் வட்ட வடிவ சின்னம் கொடுக்கபட்டுள்ளது.

    அமெரிக்கா, சீனா, ரஷ்யாவை அடுத்து இந்திய விமானப்படை உலகின் நான்காவது வலிமையான விமானப்படையாக உள்ளது.

    இதையும் படிங்க: சென்னையில் அறிமுகமான 5ஜி சேவை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

    இந்திய விமானப்படையானது இந்திய பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவாக உருவானது.தற்போது இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வரும் இந்திய விமானப்படையில் 1,70,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.1,400 போர் விமானங்களும்,1700 பயன்பாட்டு விமானங்களை இந்திய விமானப்படை தன்வசம் வைத்துள்ளது.

    Rafale, Tejas, (மிக்) MiG-29, Mirage 2000, MiG-21, Chinook, Dhruv, Chetak, Cheetah, Mi-8, Mi-17, Mi-26, ஜாக்குவார், சுகோய் உள்ளிட்ட 30 வகை போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன.

    இந்த விமான படைக்காகவே நம் நாட்டின் பல்வேறு இடங்களில் 60 விமானப்படை தளங்கள் உள்ளன.

    இந்தியாவில் மட்டுமல்லாமல் தஜிகிஸ்தானிலும், இந்திய விமானப்படைக்கென்று ஒரு தளம் உள்ளது.

    இந்திய விமானப்படையின் ஒரு அருங்காட்சியகம் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படையின் வரலாறும் சாதனைகளையும் பிரதிபலிக்கும் காட்சி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு பெருமையும் வலிமையையும் வாய்ந்த இந்திய விமானப்படையின் 90-ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    ஆசியாவின் மிகப்பெரிய விமான தளமான ஹிண்டன் விமானப்படை நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-8 இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படை தலைவர் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    தங்கள் உயிரை துச்சமென கருதி,இந்தியாவின் பாதுகாப்புக்காக பாடுபட்டு வரும் இந்திய விமானப்படை வீரர்களுக்கு “தினவாசல் செய்திகள் ” தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....