Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிப்பவர்கள் மீது நீதி விசாரணை வேண்டும்; அதிமுக அன்பழகன்

    புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரிப்பவர்கள் மீது நீதி விசாரணை வேண்டும்; அதிமுக அன்பழகன்

    புதுச்சேரியில் போலி மதுபானம் தயாரித்தல், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் தயாரிப்பது, கலால்துறை துணை ஆணையர் கையெழுத்தை போட்டு போலி பெர்மிட் தயாரிப்பவர்கள் மீது முதலமைச்சர் ரங்கசாமி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கோரிக்கை வைத்துள்ளார்.

    புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் போலி மதுபானம் கடத்தல் பிராந்தியமாக புதுச்சேரி மாநிலம் மாறி வருகிறது என்றும், போலி மதுபானம் தயாரித்து தினசரி ஆயிரக்கணக்கான அட்டைபெட்டி சரக்கு புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சர்வசாதாரணமாக வாகனங்களில் கடத்தப்படுகின்றன.

    தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியினர் துணையோடு இந்த தொழில் தடையின்றி நடந்து வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை செய்யப்படும் சரக்குகளில் போலி லேபில் ஒட்டியும், நேரிடையாக தமிழக டாஸ்மாக் விற்பனை கடைகளிலும் சரக்குகள் அனுப்பப்படுகின்றன என்றும், புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானத்தில் அரசுக்கு ஒரு பைசா கூட வருவாய் இல்லை என கூறிய அன்பழகன், சமீபகாலமாக போலி ஹாலோகிராம் லேபில் அதிக அளவில் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டு வரி ஏய்ப்பு நடக்கிறது என்றும், இவற்றை கண்காணிக்க கலால்துறையில் போதிய அதிகாரிகள் இல்லை.

    மதுபானம் கடை நடத்துபவர்கள் எங்கிருந்து சரக்குகள் வாங்கினாலும் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு சரக்கு எடுத்துச்செல்லும் போது கலால்துறை துணை ஆணையர் கையொப்பமிட்ட பெர்மிட் அவசியமாகும். துணை ஆணையர் கையெழுத்தையே பெர்மிட்டில் போலியாக போட்டு ஒரு கூட்டம் அரசை ஏமாற்றி வருகிறது. புதுச்சேரியில் போலி பெர்மிட், ஹாலோகிராம் ஸ்டிக்கர் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. கலால்துறை துணை ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு அண்டை மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் மொத்த வியாபாரிகளால் கொண்டுவருவதால் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    கலால்துறை ஆணையர் மற்றும் துணை ஆணையர் உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்யும் வியாபாரிகளுக்கு துணை போகும் துறை ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு அவர், போலி ஹாலோகிராம் ஸ்டிக்கர் தயாரிப்பது, போலி மதுபானம் தயாரிப்பது. போலி பெர்மெட் மூலமாக துணை ஆணையர் கையெழுத்து போட்டு சரக்கு வருவது போன்றவற்றால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடந்த 6 மாதகால செயல்பாடுகள் குறித்து நீதி விசாரணைக்கு மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    அதிமுக கட்சி இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் இருக்காது! கோவை செல்வராஜ் திட்டவட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....