Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவுக்கு கிடைத்த புதையல்! இனி பேட்டரிகள் உள்நாட்டிலேயே தயாரிக்க வாய்ப்பு

    இந்தியாவுக்கு கிடைத்த புதையல்! இனி பேட்டரிகள் உள்நாட்டிலேயே தயாரிக்க வாய்ப்பு

    இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    பேட்டரிகள் தயாரிப்பிற்கு மிகவும் முக்கிய மூலப்பொருளாக இருப்பது லித்தியம். குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் லித்தியம் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டில் லித்தியம் கண்டுபிடிக்கப்படாததன் காரணமாக லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. 

    இந்நிலையில், நாட்டில் முதன் முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு நாட்டில் இருக்கும் கனிம வளங்களை கண்டறிய பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 

    அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் அதிக அளவில் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    அங்கு மொத்தம் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கனிம தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் எதிர்க் காலத்தில் மின்சார வாகனங்களுக்கான மூலப்பொருளான லித்தியம் பேட்டரி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    பரிசு என்பது கடமை அல்ல – டெடி தின ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....