Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்‘யார் இந்த பேய்கள்’ - இளையராஜா இசையில் யுவனின் குரலில் முக்கிய காணொளி!

    ‘யார் இந்த பேய்கள்’ – இளையராஜா இசையில் யுவனின் குரலில் முக்கிய காணொளி!

    இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த காணொளி ‘யார் இந்த பேய்கள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. 

    சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றிருக்கிறது. இந்த வன்கொடுமைகளை தடுக்க பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்ந்து அரசாலும், பல சமூக அமைப்புகளாலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

    கல்வி நிலையங்களில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு காணொளிகள் காட்டப்பட்டும், ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டும் வருகிறது. இருப்பினும், சிறுவர்களின் மீதான வன்கொடுமை தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. வெறுமனே பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது பெற்றோர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம் என முடிவெடுத்து, அதற்கான முன்னெடுப்புகளையும் அரசு மற்றும் பல சமூக அமைப்புகள் எடுத்து வருகின்றன. 

    இப்படியான சூழலில், இசையுலகின் ராஜாவான இளையராஜா இசையில், யுவன்சங்கர் ராஜா குரலில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு விழிப்புணர்வு காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ‘யார் இந்த பேய்கள்’ என்ற தலைப்பில் பாடல் காணொளியாக, சிறுவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமையை எளிமையாகவும் ஆழமாகவும் கூறியுள்ளனர். 

    பாடலாசிரியர், பா.விஜய் வரிகளில் உணர்வுகள் கொப்பளிக்க அதை இயக்குநர் கிருத்திகா உதயநிதி படமாக்கிய விதம் பாராட்டக்குரியது. ‘குழந்தைகள் சொல்வதைக் கேட்போம்’ என்ற கருத்தை ஆணித்தனமாக கூறியுள்ள இந்த காணொளியானது தற்போது சமூகவலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

    இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை; இன்று முதல் நாள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....