Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பரிசு என்பது கடமை அல்ல - டெடி தின ஸ்பெஷல்!

    பரிசு என்பது கடமை அல்ல – டெடி தின ஸ்பெஷல்!

    உலகெங்கிலும் பரவலாக கொண்டாடப்படும் தினங்களில் ஒன்றுதான், காதலர் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை வரவேற்க பிப்ரவரி ஏழாம் தேதி முதல் சிறு சிறு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், இன்று டெடி தினம் கொண்டாடப்படுகிறது.

    தங்கள் இணைகளுக்கு டெடி பியர் பொம்மைகளை பரிசாய் அளிக்கும் நாளாய் இன்றைய நாள் இருக்கிறது. மிருதுவாக, அணைக்க ஏதுவாக இருக்கும்  பொம்மைகளை இன்று பலர் தங்கள் இணைகளுக்கும், பிடித்தவர்களுக்கும் பரிசளிப்பர்.

    பரிசு என்பது கடமை அல்ல

    அவை அன்பின் வெளிப்பாடு 

    இந்த நாளில் ஏன் டெடி பொம்மை மட்டும்?

    டெடிகள் வெளியில் மட்டும் அல்லாமல் அக அழகை அதிகம் உடைய ஒரு விலங்கு என்று கூறப்படுகிறது. அதோடு, டெடிகளிடத்தில் கள்ள கபடம் அற்ற அப்பாவித்தனம் எப்போதும் இருக்குமென்றும் இதை அடிப்படையாகக் கொண்டே டெடி பொம்மைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மிருதுவாகவும், அணைக்க ஏதுவாகவும், அணைக்க தூண்டும் விதமாகவும் டெடிகள் இருப்பதாலும் அவைகள் பரிசாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

    teddy

    காதலர் தினத்தை வரவேற்க, அதற்கு முன்னம் இருக்கும் நாட்களை, அழகாய் போலித்தனம் அற்று இயல்பாய் கொண்டாடுவதென்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியான நாட்களில் ஒன்றான டெடி தினத்தையும் இயல்பாய், எந்த பொய் முலாமும் பூசாமல் தங்கள் இணைகளுடன் கொண்டாட வாழ்த்துகள்!

    சாக்லேட் தினம் என்பது வெறுமனே சாக்லேட்டை பகிர்தல் அல்லவாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....